பென்னிகுவிக் சிலை திறப்பு விழா: பெரியாறு பாசன விவசாயிகள் அதிருப்தி

பென்னிகுவிக் சிலை திறப்பு விழா: பெரியாறு பாசன விவசாயிகள் அதிருப்தி
X

பென்னிகுவிக் சிலை. (பைல் படம்)

Pennycuick -வரும் செப்டம்பர் 10ம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பர்லி நகரின் மையப் பகுதியில் இருக்கும் பூங்காவில் பென்னிகுவிக் சிலை திறக்கப்படுகிறது.

Pennycuick -இங்கிலாந்து நாட்டில் உள்ள தமிழர்களின் முன்முயற்சியாலும், தமிழக அரசின் ஒத்துழைப்பாலும், அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அனுமதி பெறப்பட்டு சிலை திறக்கப்பட இருக்கிறது. அது தொடர்பான விளம்பரங்களும் கேம்பர்லி நகர ரயில் நிலையங்களில் கண்ணை பறிக்கிறது. அமைச்சர்களையும், தன் கட்சி மாவட்ட செயலாளர்களையும் லண்டனுக்கு அனுப்பி சிலையை திறந்து வைப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் எந்த விவசாயிகளுக்காக கடும் இன்னலுக்கு மத்தியில் பெரியாறு அணையை கட்டினாரோ, அந்த விவசாயிகளில் ஒரு 10 பேரை தேர்ந்தெடுத்து, அமைச்சர்களோடு லண்டனுக்கு அனுப்பி இருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

பெரியாறு அணை உரிமை மீட்க போராடி வரும் கே.எம்.அப்பாஸ், அன்வர் பாலசிங்கம் உட்பட பல விவசாய சங்க முக்கிய தலைவர்களில் ஒரு சிலரை இந்த சிலை திறப்பு விழாவிற்கு அனுப்பியிருந்தால் விழா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதனை செய்யாமல், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் சில ஜாதி சங்க தலைவர்களும் சென்றுள்ளனர். ஜாதிச்சங்க தலைவர்களுக்கும், சிலை திறப்பு விழாவிற்கும் என்ன தொடர்பு உள்ளது.

அந்த மாமனிதரை எப்போதாவது நினைவு கூறும் அரசியல்வாதிகளை விட, எப்போதும் நினைவு கூறும் பச்சைத் துண்டுக்காரர்களுக்கு (விவசாயிகளுக்கு) எந்த முக்கியத்துவமும் இல்லாத விழாவாக கேம்பர்லி நகரில் நடக்க இருக்கும் பென்னிகுவிக் சிலை திறப்பு விழா இருப்பது எங்களை பொறுத்தவரை மிகுந்த வருத்தம் தரும் விஷயம் தான் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?