லஞ்சம் கொடுத்த பணத்தை செலவு கணக்கில் எழுதிய ஊராட்சி

லஞ்சம் கொடுத்த பணத்தை செலவு கணக்கில் எழுதிய ஊராட்சி
X

பைல் படம்

அதிகாரிகளுக்கும், நிருபர்களுக்கும் லஞ்சமாக கொடுத்த பணத்தை சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் ஊராட்சி செலவு கணக்கில் எழுதி வைத்துள்ளார்.

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் 11 பேர் கலெக்டர் முரளீதரனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் சுருளிப்பட்டி ஊராட்சியில் தலைவர் எழுதிய செலவு கணக்குகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அவர்கள் கலெக்டரிடம் ஒப்படைத்த செலவு கணக்கு பட்டியலில் கம்பத்தை சேர்ந்த ஒரு அதிகாரியின் உறவினர்களுக்கு ரூம் போட்ட செலவு 34 ஆயிரம் ரூபாய், தாசில்தார் ஒருவருக்கு கண்ணகி கோயில் செலவுக்கு கொடுத்த நன்கொடை செலவு 5 ஆயிரம், ஒரு நிருபருக்கு தலா 500 ரூபாய் வீதம் 4 நிருபர்களுக்கு கொடுத்த செலவு ரூபாய் 2000ம், உதவி இயக்குனர் ஒருவர் சுருளி அருவிக்கு சென்று வந்ததற்கு செய்த செலவு 2700 ரூபாய், கிராமசபை கூட்ட டீ செலவு ரூபாய் 1800, போலீசுக்கு கொடுத்த செலவு ஆயிரம் ரூபாய், ரூபாய், ஒவர்சியர், இன்ஜினியருக்கு கொடுத்த செலவு என கணக்கு நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செலவுகள் செய்தது உண்மையா இல்லையா? இப்படிப்பட்ட செலவுகளை ஊராட்சி கணக்கில் ஏற்றலாமா? இல்லையா? என விசாரணை தொடங்கி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!