ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க ஆவணங்களை எரித்த ஊராட்சி செயலாளர்

ஊழல் புகாரில் இருந்து  தப்பிக்க  ஆவணங்களை எரித்த ஊராட்சி செயலாளர்
X
ஊழல் புகாரில் இருந்து தப்ப திருமலாபுரம் ஊராட்சி செயலாளர் ஊராட்சி ஆவணங்களை தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கி விட்டார்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் குமரேசன். இவர் இங்குள்ள பூங்கா இடத்தை தனியாருக்கு விற்றுள்ளார். இது தொடர்பாக பி.டி.ஓ., கொடுத்த புகாரில் தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஊராட்சி செயலாளர் குமரேசன் உட்பட தொடர்புடைய அத்தனை பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி செயலாளரை கலெக்டர் முரளீதரன் சஸ்பெண்ட் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் குமரேசன், ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஆணவங்களை அள்ளிப்போட்டு தீ வைத்து எரித்து விட்டார். இது தொடர்பாக க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story