நகராட்சி தலைவர் தேர்தலி்ல் போட்டி: ஊராட்சி தலைவர் பதவிக்கு முழுக்கு

நகராட்சி தலைவர் தேர்தலி்ல் போட்டி: ஊராட்சி தலைவர் பதவிக்கு முழுக்கு
X

ரேணுகா பாலமுருகன்.

தேனி நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட, தான் வகித்து வந்த கிராம ஊராட்சி தலைவர் பதவியை ரேணுகாபாலமுருகன் என்பவர்ராஜினாமா செய்தார்

தேனி தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன். இவரது மனைவி ரேணுகா வடபுதுப்பட்டி கிராம ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இவர் இரண்டாவது முறையாக இங்கு கிராம ஊராட்சி தலைவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் தேனி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், ரேணுகா பாலமுருகன் போட்டியிட உள்ளார். இதனால் தேனியில், முதலில் வார்டு கவுன்சிலர் வேட்பாளராக மனுதாக்கல் செய்ய உள்ளார். இதற்கு வசதியாக, தான் இதுவரை வகித்து வந்த வடபுதுப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?