பிரதமரிடம் நாளை மீண்டும் பஞ்சாயத்து..?
பைல் படம்
பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். நாளையும், நாளை மறுநாளும் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
தமிழகத்தில் முதுமலை செல்கிறார். பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க வை பொருத்தவரை அத்தனை விஷயங்களும் முடிந்து விட்ட நிலையில் தனது இருப்பை தக்க வைக்க ஓ.பி.எஸ்., பிரதமர் மோடி உதவியை நாடி வருகிறார். காரணம் கோர்ட் பஞ்சாயத்துகள் நிறைவு பெற்றாலும், தேர்தல் ஆணையம் முழுமையான ஒரு அங்கீகாரத்தை இன்னும் இ.பி.எஸ்.க்கு வழங்கவில்லை.
தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரித்து விட்டால் இ.பி.எஸ்.-க்கு இருக்கும் அத்தனை சூழலும் அவருக்கு உதவி செய்யும். இல்லையேல் மீண்டும் போராட வேண்டி வரும். தவிர பா.ஜ.க மேலிட தலைவர்கள் கூட்டணி உறுதி என்றாலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையோ இன்னும் பா.ஜ.க தலைமையில் தான் இனி கூட்டணி.ஈரோடு தேர்தல் கதை வேறு. இனி நடக்கப்போகும் கதை வேறு என புளியை கரைத்து வருகிறார்.
அண்ணாமலை எப்படியும் பிரதமரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி அதற்கு அனுமதி பெறவே முயற்சிப்பார். இதற்கும் செக் வைத்து, கூட்டணி பிரச்னையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் இருப்பதால் இ.பி.எஸ்., எப்படியாவது பிரதமர் மனம் கவர்ந்து விட வேண்டும் முயற்சிக்கிறார்.
எத்தனை முறை தோற்றாலும் கவலையில்லை. போராட்டமே வாழ்க்கை என்றாகி வி்ட்டது. கிரிக்கெட்டில் கடைசி பந்தில் கூட பல ஆட்ட முடிவுகள் மாறியிருக்கின்றன. எனவே நாங்கள் விடப்போவதில்லை. இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில், நாங்கள் போராட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் கொந்தளித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்.-சும் இந்த பஞ்சாயத்தை சுமூகமாக முடித்து வையுங்கள். எனது பழைய நிலையை மீட்டுத்தாருங்கள் என கேட்க பிரதமரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளார்.
பிரதமர் இதுவரை இருவருக்கும் நேரம் ஒதுக்காதா நிலையில், இனிமேல் என்ன செய்யப்போகிறார் என பதற்றடத்துடனே இருக்கின்றனர். அ.தி.மு.க.வின் பஞ்சாயத்துகள் மற்றும் கூட்டணி பஞ்சாயத்துகளின் நிலை பற்றி பிரதமர் நிச்சயம் தனது கட்சி நிர்வாகிகளுக்காவது சிக்னல் தராமல் தமிழகத்தை விட்டு புறப்பட மாட்டார் என பா.ஜ.கவினர் திடமாக கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu