தேனி மாவட்டத்தில் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

தேனி மாவட்டத்தில் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை திருப்பி அனுப்பாமல் வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் முரளீதரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தற்போதய நிலையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டது. இதுவரை இத்தனை நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது இல்லை.

சில விவசாயிகள் குத்ததைக்கு நிலத்தை பிடித்தும், ஒத்தி வாங்கியும் நெல் சாகுபடி செய்துள்ளனர். இவர்களிடம் சொந்த நிலத்திற்கு உரிய ஆவணங்களை கேட்பது தவறு என்பதால், விவசாயிகள் அறுவடை செய்து நெல் கொண்டு வந்தால் உடனே வாங்க வேண்டும். தேவையில்லாமல் ஆவணங்களை கேட்டு விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது என கொள்முதல் மைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!