மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!

மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
X

பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களிடம் பிரதமர் மோடிக்காக ஓட்டு சேகரிக்கின்றனர்.

பாரத பிரதமாக மோடி பதவி வகித்த 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் மதிப்பு ஒட்டுமொத்த உலகிலும் உயர்ந்து விட்டது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வல்லரசு நாடுகள் கூட இந்தியாவிற்கு வணக்கம் சொல்லும் நிலை காணப்படுகிறது.

பல உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் பிரதமர் மோடி போல் தங்கள் நாட்டிற்கு தலைவர் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டு வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் முக்கிய எதிரி நாடுகளான பாக்கிஸ்தான், சீனா நாடுகளிலும், அந்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு அதிகளவு மரியாதை கிடைத்து வருகிறது. மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் இந்தியர்கள் மதிக்கப்படுகின்றனர். கொரோனா பேரிடர், துருக்கி பூகம்பம், செங்கடலில் நடந்த கடற்கொள்ளைகள், உக்ரைன்- ரஷ்யா போர், இஸ்ரேல்- காசா போர், இப்போது புதிதாக தொடங்கி உள்ள இஸ்ரேல்- ஈரான் போர் போன்ற அத்தனை பேரிடர்களில் இருந்தும் இந்தியாவையும், இந்தியர்களையும் மோடி காப்பாற்றினார். தவிர உலக நாடுகளுக்கும் கூட வழிகாட்டியாக இருந்துள்ளார். இதனை பல உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.


இந்நிலையில் இந்தியாவி்ல் தேர்தல் நடந்தால் மோடி பிரதமாக வரக்கூடாது என பல உலக நாட்டு தலைவர்கள் நினைத்து மோடியை வீழ்த்த திட்டமிட்டு செயல்படுகின்றனர். காரணம் மோடி இம்முறையும் வென்று விட்டால், இந்தியா உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக மாறி விடும். மோடி உலக தலைவர்களில் முதல் இடத்தை பெற்று விடுவார்.

அவருடன் தங்கள் நாட்டு மக்கள் தங்களை ஒப்பிடும் போது தாங்கள் பின்தங்கி விடுகிறோம் என பல உலக நாட்டு தலைவர்கள் கூட மோடியை பார்த்து பயப்படுகின்றனர். அவரது அயராத உழைப்பும், புத்திசாலித்தனமும் அப்படிப்பட்டது.

இந்தியாவில் பாதுகாப்பாக வாழும் மக்களுக்கு பிரதமர் மோடியின் அருமை தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடியை நன்கு உணர்ந்துள்ளனர். இதனால் தற்போது நடைபெறும் தேர்தலிலும் பாஜக., வெற்றி பெற்று பிரதமாக மோடியே வர வேண்டும் என நினைக்கின்றனர்.

இதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு போன் செய்து மோடிக்காக ஓட்டளிக்குமாறு கேன்வாஸ் செய்கின்றனர். இந்த புதிய வழிமுறை மூலம் பல லட்சம் ஓட்டுகள் பா.ஜ.க.,விற்கு மாறுகின்றன என்பது மிகப்பெரிய விஷயம். பா.ஜ.க.,விற்கு இப்படி ஒரு ஓட்டு வங்கி உருவாகி உள்ளது எதிர்க்கட்சிகளை கலங்கடித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!