தேனி மாவட்டத்தில் நிரம்பி வழியும் நீர்நிலைகள்: 24 மணி நேர கண்காணிப்பு

தேனி மாவட்டத்தில் நிரம்பி வழியும் நீர்நிலைகள்: 24 மணி நேர கண்காணிப்பு
X
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நுாற்றி முப்பத்தி ஒன்பது அடியை நெருங்கி உள்ளது.
தேனி மாவட்டத்தில் அத்தனை அணைகள், ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகள், கண்மாய்கள், குளங்கள் வருவாய்த்துறையின் முழு கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக மழை பெய்தாலும், கடந்த 10 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகள், கண்மாய்கள், குளங்கள் நிறைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்திற்கு ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர். 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகள், கண்மாய்களையும் வருவாய்த்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே போலீசாரும், தீயணைப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது வருவாய்த்துறையினரும் இப்பணியில் கை கோர்த்துள்ளனர்.

ஐந்து தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வெள்ள கட்டுப்பாட்டு அறையும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. வௌ்ள அபாயம் மிகுந்த 43 இடங்களில் போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் வைக்கபப்ட்டுள்ளனர்.

வெள்ள அபாயம் ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க 66 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கால்நடைகளை தங்க வைக்க 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், உட்பட 300க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் இருக்கின்றனர். மீட்பு பணிகளுக்கு தேவையான முழு உபகரங்கள், மருந்துகள், உணவுகள் தயாராக உள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story