இடுக்கி மாவட்டத்தில் தொற்று நோய் பரவல்: தமிழக சுகாதாரத்துறை 'அலர்ட்'
தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் எழுபத்தி ஐந்து கி.மீ., எல்லைகளை பகிர்ந்துள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் என மூன்று வழித்தடங்கள் வழியாக கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் இடையே போக்குவரத்து நடந்து வருகிறது.
இப்போது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இன்னும் தேனி மாவட்டத்தில் மழை தொடங்கவில்லை. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இனம் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல்கள், (உடல்வலி, சளி, தும்மல், தலைவலி, தசைவலிகளுடன் கூடியது), வாந்தி, வயிற்றுப்போக்கு, அம்மை, டெங்கு காய்ச்சல் என அடுத்தத்து பல தொற்று நோய் பரவல்கள் அதிகரித்து வருகிறது.
அத்தனை தொற்று நோய்களும் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. எனவே தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்தி்றகு தினமும் குறைந்தது ஐம்பதினாயிரம் பேருக்கும் மேல் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். அதேபோல் இடுக்கி மாவட்டத்தில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இவர்கள் மூலம் தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தேனி மாவட்ட சுகாதாரத்துறை அலர்ட் ஆகி உள்ளதோடு கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu