வந்தே பாரத் ரயிலுக்கு குவியும் ஆர்டர்கள்
பைல் படம்.
அந்த வெற்றியை நாம் உணரும் முன் மேற்கத்திய நாடுகள் அதன் சிறப்பை மோப்பம் பிடித்து விட்டன. அதன் விளைவு உலக நாடுகள் இந்தியாவின் வந்தே பாரத் ரயில்களை வாங்க போட்டி போட்டு ஆர்டர்கள் கொடுத்து வருகின்றன.
இந்தியா 180 கிமீ வேகம் கொண்ட விரைவு ரயிலை இயக்க ஏலம் கேட்டபோது, ஒரு ஸ்பெய்ன் நிறுவனம் 250 கோடிக்கு கேட்டது தான் குறைவான ஏலம். ஸ்பெய்னின் Talgo 10 பெட்டியோட 180 கிமீ வேக ரயிலுக்கு 250 கோடி கேட்டது. மேலும், அதன் டிஸைன் எதுவும் பகிரமாட்டார்கள் என்ற கண்டிஷனுடன். எனவே, அவர்களிடம் தான் மீண்டும், மீண்டும் அதை வாங்க வேண்டும். அதற்கு நம்ம இந்திய பொறியாளர் மணி சொன்னது, வெறும் 100 கோடி ரூபாய் கொடுங்கள். அதைவிட பவர்ஃபுல்லான ரயிலை நான் தருகிறேன் என்றார். அவருக்கு இரண்டு வருடங்கள் சர்வீஸே மீதியிருக்கும் நிலையில், அவரது ப்ளூ பிரிண்டால் மோடி அரசு அவரை முழுதாக நம்பியது.
மணி நமது சென்னை ICF ல் தயாரித்த ரயிலுக்கு ஆன செலவு மொத்தம் 97 கோடி தான். 3 கோடியை திரும்ப கொடுத்தார். அதுவும், ஸ்பெய்னின் ரயிலை விட பவர்ஃபுல்லான எஞ்சின், ஒவ்வொரு பெட்டியின் உந்து சக்தியுடன் அதன் வேகத்தை இன்னும் கூட்ட முடியும். ஆனால் அதற்கு தேவையான இருப்புப்பாதை கட்டமைப்புகள் நம்மிடம் போதுமானதாக இல்லை என்பதால், 180 கிமீ வேகத்தில் மட்டும் சோதிக்கப்பட்டது. அதுதான் இன்று இந்தியாவெங்கும் ஓடும் வந்தே பாரத்.
ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயிலின் விலை குறைவாக இருப்பதால், உலகம் முழுவதுமிருந்து ஆர்டர்கள் தேடிவருகிறது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தேவை 400 வந்தே பாரத் என்பதால் ஏற்க முடியவில்லை.
இந்த 400 ரயில்களுக்கு நாம் கொடுக்கும் விலை 400×100=40,000 கோடிகள். அதுவே ஸ்பெயினுக்கு அந்த ஆர்டரை கொடுத்தால், 400×250=1,00,000 ம் ஆம் ஒரு லட்சம் கோடி. அதன் வித்தியாசம் 60,000 கோடிகள். மேலும், அந்த 40,000 கோடியும், இந்தியாவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, இந்திய நிறுவனங்கள் வளரும். சரி இதை ஏன் மேற்கத்திய நாடுகள் எதிர்க்க வேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? இந்திய TRAIN 18 இன் விலையை விட உலகத்திலேயே விலை குறைவான ஸ்பெய்ன் ரயிலின் விலை 250 கோடிகள், அதாவது 250%. அப்போது உலக நாடுகள் இந்தியாவிடம் வாங்குமா? இல்லை மேற்கத்திய நாடுகளிடம் வாங்குமா? எனவே, நமது ரயில்கள் வெற்றி பெற்றால், அவர்களுக்கு வேலையில்லை. ஆம் அவர்கள் வேலையில்லாமல் மோடியை எதிர்க்கவில்லை, அவர்களுக்கு வேலை போய்விடக்கூடாது என்பதற்காக எதிர்க்கிறார்கள் என்பது புரிகிறதா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu