தேனி மாவட்டத்தில் 9ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவு

தேனி மாவட்டத்தில் 9ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவு
X
பைல் படம்.
தேனி மாவட்டத்தில் 9ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் வரும் 9ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வரும் ஜனவரி 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தகுதி வாய்ந்த அத்தனை ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு 9ம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும்.

அதேபோல் 10, 11, 12ம் தேதிகளில் இந்த மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்களை வழங்கி முடிக்க வேண்டும். பொங்கல் பண்டிகை தொடங்கும் முன்னரே ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அத்தனை பொருட்களையும் வழங்கி விட வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்