ஓ.ராஜா நீக்கப்பட்டது ஓ.பி.எஸ்.,ன் நாடகம்: தங்கதமிழ்செல்வன் விமர்சனம்
தங்க.தமிழ்செல்வன் (பைல் படம்)
பெரியகுளத்தில் ஓ.ராஜா நகராட்சி தலைவராக இருந்த போது கிருஷ்ணன் கோயிலுக்கு செல்லும் பாதையினை மறித்து சுவர் கட்டினார். பழமை வாய்ந்த நகராட்சியில் இந்த பாதையினை முந்நுாறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தி.மு.க., இந்த சுவரை இடித்து பாதையை ஏற்படுத்தி தருவோம் என வாக்குறுதி கொடுத்து வென்றது. பெரியகுளம் நகராட்சி தி.மு.க., தலைவர் சுமித்ரா முதல் வேலையாக இந்த சுவற்றை இடித்து பாதையை உருவாக்கி கொடுத்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு பாதை கிடைத்த மகிழ்ச்சியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனை பார்வையிட வந்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழசெல்வன் கூறியதாவது: மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம். முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., தர்மயுத்தம் நடத்தாமல் இருந்தாலே சசிகலா தலைமை நீடித்திருக்கும். சசிகலா தமிழக முதல்வராகவும் ஆகியிருப்பார். அப்போது தர்மயுத்தம் நடத்தி சசிகலாவை நீக்கியவர். இப்போது நாடகம் ஆடுகிறார்.
சசிகலாவை சந்தித்த தனது தம்பியையும், சில அ.தி.மு.க., நிர்வாகிகளையும ்நீக்கிய ஓ.பி.எஸ்., அந்த அறிக்கை தயாரித்து பகிரங்கமாக பேட்டி கொடுத்த தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் எம்.பி.,பார்த்திபன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு தைரியம் இல்லையா? இந்த நாடகங்களால் அ.தி.மு.க., தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்டமே தற்போது நடக்கும் நாடகம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu