/* */

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்? இறுதிக்கட்டத்தில் அதிமுக பஞ்சாயத்து

மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற விசாரணையிலுள்ள நிலையில், பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்?   இறுதிக்கட்டத்தில் அதிமுக பஞ்சாயத்து
X

பைல் படம்

ஒற்றை தலைமை யுத்தத்தின் காரணமாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு பட்டு கிடக்கிறது அதிமுக. இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இன்றைய தேதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைககால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

ஆனால், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கு, கட்சி தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றமும், ஆணையமும் என்ன முடிவெடுக்க போகி்ன்றன என்பதை பொறுத்து தான் கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பது 100% உறுதியாகும்.

ஆனாலும், கட்சியின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகளின் ஆதரவு தமக்கே இருப்பதால் இன்னும் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துவது மட்டும்தான் மிச்சம். அந்த தேர்தலின் மூலம் கட்சியில் ஜெயலலிதா வகித்து வந்த உயர் பொறுப்பான பொதுச் செயலாளர் பதவிக்கு வந்து விடலாம் என்று கணக்கு போட்டு, அதற்கேற்றாற்போல் காய்களை நகர்த்தி வருகிறார் இபிஎஸ்.

இந்த நிலையில், இபிஎஸ் அன்கோவின் ரிலாக்ஸ் மூடை கெடுக்கும்படியான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது தொடர்பாக ஓபிஎஸ் விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள்தான் தற்போது இபிஎஸ் தரப்பை டென்ஷனாக்கி உள்ளது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே 90% அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாகவும், இபிஎஸ் அணியில் உள்ள சிலரது விருப்பமும் இதுதான் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தியபோதும் கட்சி இரண்டுபட்டு இருந்தது, அப்போது பாஜக மேலிடம்தான் இருதரப்பையும் சமரசம் செய்து ஓன்றிணைத்து வைத்தது. அதேபோன்று தற்போதும் கட்சியின் நலன் கருதி பாஜக சமரச முயற்சியை மேற்கொண்டால் அதில் தவறொன்றுமில்லை என்பதே ஓபிஎஸ் தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், சசிகலாவின் பக்கம் இருக்கும்வரை ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்க்க கூடாது என்பதில் இபிஎஸ் அன்கோ தீர்மான உள்ளதால், இந்த சமரச முயற்சி எடுபடுமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், அதிமுக பிளவுப்பட்டு நிற்காமல் ஒன்றிணைந்து இருப்பதே அரசியல் ரீதியாக தமக்கு லாபம் என பாஜக கருதுவதால், அக்கட்சியின் மேலிட விருப்பப்படி, ஓபிஎஸ் உடன் இபிஎஸ் சமரசம் செய்து கொள்ள வேண்டி வருமா? என்பன போன்ற நகர்வுகள் இப்போதைக்கு தெரியாது.

ஆனால், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை டார்கெட் செய்து இபிஎஸ் தரப்பின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தங்கமணி சமீபத்தில் பொதுவெளியில் பகிரங்கமாக பேசியதன் எதிர்வினையாக ஓபிஎஸ் -மோடி சந்திப்பு என்று ஓபிஎஸ் தரப்பினர் கிளப்பிவிட்டிருக்கலாம். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் இருதரப்பும் மீண்டும் ஒன்றிணையலாம். எதுவாக இருந்தலும் அதிமுகவின் கிளைமாக்ஸை காண இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கதான் வேண்டும் என்கின்றனர் அதிமுகவில் விவரமறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.

Updated On: 9 Oct 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்