காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு
பிரதமர் மோடி- நாட்டுநாட்டு பாடல் காட்சி- எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் RRR படத்தில் இடம் பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருதை மேடையில் பெற்றுக் கொண்டனர்.
ஏற்கனவே 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இடம்பெற்ற 'ஜெய்ஹோ' பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்றார்.
இதன் பிறகு இப்போதுதான் நாட்டுப் பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இசையமைப்பாளர் கீரவணி உட்பட இசைக்குழுவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்திலும் ஆஸ்கர் விருது வென்ற இரண்டு படங்களுக்கும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துப் பேசியுள்ளனர். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசும்போது,"ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழு மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். இரண்டு விருதுமே தென் இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி. அதில் அவர்கள் அதிகம் பெருமை கொள்வார்கள். நானும் பெருமை கொள்வேன். நீங்களும் பெருமை கொள்ளலாம்.
ஆனால் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் உள்ளது. அதாவது, ஆளும் கட்சி நாங்கள் தான் பாடலை எடுத்தோம், நாங்கள் தான் பாடலை எழுதினோம், பிரதமர் மோடி தான் RRR படத்தை இயக்கினார் என கிரெடிட் எடுத்துக் கொள்ள வேண்டாம். என கூறினார். இதற்கு பா.ஜ.க வினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தான் செய்த சாதனைகளுக்கே பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. விளம்பரம் எதுவும் தேடவில்லை. மாறாக இந்திய கலாசாரத்தையும், பண்பாட்டையும் உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்ப்பதற்காக ஆர்வமுடன் உழைக்கிறார். இந்நிலையில் இந்திய கலைஞர்களின் பாடலும், அவர்கள் எடுத்த டாக்குமெண்டரி படமும் ஆஸ்கர் பெற்று இருப்பதை, பிரதமர் மோடி நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறார்.
இதற்காகத்தான் அந்த கலைஞர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். இதனை கூட பொறுக்காத எதிர்க்கட்சிகள், ஒரு வாழ்த்து செய்தியை கூட திரித்து பேசுவது கண்டனத்திற்கு உரிய விஷயம் என பதிலடி கொடுது்துள்ளனர். இது தொடர்பாக பா.ஜ.க வினர் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து வருகின்றனர்.
ஆர்ஆர்ஆர். திரைப்படத்தின் இசையமைப்பாளர் மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.படத்தின் பெரும்பலமே ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார்தான். ஒவ்வொரு காட்சியிலும் உயர்ந்திருக்கிறார். ஒரு நொடியில் தோன்றிமறையும் காட்சியின் வடிவமைப்புக் கூடச் சிறப்பாக இருக்கிறது.பெரிய கதாநாயகர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது இயக்குநர் ராஜமெளலிக்கு அத்துபடியாகியிருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu