200 மரங்களை வெட்ட அடம்பிடிக்கும் அதிகாரிகள்: பல லட்சம் வருமானம் –விவசாயிகள் புகார்
கூடலுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நி லையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம். (லோயர்கேம்ப் ரோட்டோரம் உள்ளது)
கூடலுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 200 மரங்களை வெட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதற்கு முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், கூடலுாரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தற்போது 200க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் எல்லாமே 40 ஆண்டுகளை கடந்து வளர்ந்தவை. அருகில் தற்போது கழிவுநீர் குழாய் மூலம் கழிவுநீர் வெளியேறும் தொட்டி உள்ளது. இந்த இடத்தில் தேவையான அளவு காலியிடமும் உள்ளது.காலியிடம் இருக்கும் நிலையில், 200 மரங்களை வெட்டித்தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அடம் பிடிக்கின்றனர். காரணம் இந்த மரங்களை வெட்டினால் நகராட்சி அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இதற்காக மரங்களை வெட்ட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதனை அனுமதிக்க கூடாது என கூடலுார் முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu