முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவது மட்டுமே தீர்வு

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவது மட்டுமே தீர்வு
X

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்குவதை தவிர வேறு எந்த தீர்வையும் முன்வைக்க வேண்டாம் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்.

இச்சங்கத்தின் முல்லை பெரியார், வைகை அணை விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் போராடி வருகிறோம். ஆனால் கேரளாவில் வக்கீல் ரசல்ஜோய் போன்ற சிலர், திட்டமிட்டு நாடகம் ஆடி, தமிழகத்தின் இதர மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகளை அழைத்து முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றுத்திட்டம் குறித்து பேசுகின்றனர்.

இதர விவசாயிகளுக்கு முல்லைப்பெரியாறு அணையினை பற்றி என்ன தெரியும். இது பற்றி தெரிந்த இதனால் பயன்பெறும் ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே தமிழக விவசாயிகள் கேரளாவின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் வடிவமைப்பு, நீர்வழிப்போக்கு குறித்த அத்தனையுமே கர்னல் பென்னிகுவிக் தெளிதாக திட்டமிட்டு வடிவமைத்துள்ளார்.

இந்த வடிவமைப்பில் எந்த மாற்றத்தையும் தமிழக விவசாயிகள் ஏற்க மாட்டோம். முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கும் திட்டம் ஒன்றை தவிர வேறு எதையும் தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் ஏற்கவே மாட்டோம். எனவே தமிழகத்தில் இருந்து கேரளா சென்று பேசப்போகும் விவசாய சங்க நிர்வாகிகள் இதில் தெளிவாக இருக்க வேண்டும். வேறு எந்த மாற்று திட்டம் முன்வைத்தாலும் கேரள பிரிவினை வாதிகளும் ஏற்க மாட்டார்கள். காரணம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் வருகிறது. கேரளாவில் ஆண்டு தோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது.

முல்லை பெரியாறு அணையில் தேங்கும் தண்ணீர் தேக்கடி ஏரியில் தேங்கி நிற்பதன் மூலம், அதில் விடும் படகு போக்குவரத்து மூலம் வரும் சுற்றுலா வருவாய் மட்டும் ஆயிரம் கோடியை தாண்டும். இதர வருவாய்களும் உள்ளது. எனவே தேக்கடியில் (முல்லைப்பெரியாறு அணையில்) இருந்து அதிக பள்ளம் தோண்டி தண்ணீரை எடுக்கும் திட்டத்தை கேரள ஏமாற்றுக்காரர்கள் ஏற்கவே மாட்டார்கள். அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வக்கீல் ரசல்ஜோய் எப்படி இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

தமிழக விவசாய சங்க நிர்வாகிகளே முதலில் நீங்கள் தெளிவாக இருங்கள். முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி என்பதை தவிர வேறு எந்த மாற்று திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்பதை நீங்களும் புரிந்து கொண்டு கேரள பிரிவினைவாதிகளுக்கும் புரியவையுங்கள். கர்னல் பென்னிகுவிக் அணை கட்டி இயற்கையின் பேராண்மையை மெருகேற்றி உள்ளார். இதனை சிதைக்க ஒரு போதும் யாரும் ஒப்புக்கொள்ளாதீர்கள். நாங்களும் ஏற்கமாட்டோம். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!