தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று (16ம் தேதி) மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இன்று தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த 1389 பேருக்கு பெருந்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானது. இதில் மூன்று பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!