விலையில் வீழ்ந்தது வெங்காயம்..! கடும் நஷ்டத்தில் விவசாயிகள்

விலையில் வீழ்ந்தது வெங்காயம்..! கடும் நஷ்டத்தில் விவசாயிகள்
X
வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

சின்னவெங்காயம் தேனி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலத்தை உழுவது, பாத்தி கட்டுவது, வெங்காயம் நடுவது, உரமிடுவது, மருந்துதெளிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, பறிப்பது, பதப்படுத்துவது வரை ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த 90 நாட்களும் விவசாயிகள் குடும்பத்துடன் உழைக்க வேண்டியிருக்கும்.

ஆனால் அறுவடை நேரத்தில் விலை கிடைக்காமல் போய் விடுவதால் நுாறு நாள் உழைப்பும் வீணாகி, பலத்த பண நஷ்டமும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இந்த ஆண்டும் அதே கதை தான் உள்ளது. குறிப்பாக சில்லரை மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் வியாபாரிகள் கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கே வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு விலை கட்டுபடி ஆகவில்லை. வெங்காயம் விலை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தால் விவசாயிகள் பெரும் மனஉலைச்சலில் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!