போடியில் போதை தகராறில் ஒருவர் வெட்டி கொலை

போடியில் போதை தகராறில் ஒருவர் வெட்டி கொலை
X
போடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

போடி வலசத்துறை ஊத்தாம்பாறையில் உள்ள தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தவர்கள் ஜெகதீஸ்வரன், 45, முருகன், 53. நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ்வரன் பக்கத்தில் கிடந்த அரிவாளை எடுத்து முருகனை சராமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவத்திலேயே இறந்தார். பின்னர் அருகில் இருந்து ஓடையில் முருகன் உடலை துாக்கி போட்டு விட்டார். முருகனை காணாமல் தேடிய நபர்கள், தோட்டத்தில் கிடந்த உடலை மீட்டனர். பின்னர் ஜெகதீஸ்வரனிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். குரங்கனி போலீசார் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

Tags

Next Story
குடும்ப ஆரோக்கியத்திற்கு மூன்று மசாலா பொருட்களின் அற்புத பலன்கள்