வீரபாண்டி அருகே கோர விபத்து ஒருவர் பலி: ஐந்து பேர் பலத்த காயம்

வீரபாண்டி அருகே கோர விபத்து  ஒருவர் பலி: ஐந்து பேர் பலத்த காயம்
X
தேனி அருகே வீரபாண்டியில் சரக்கு வேனும், ஆம்னி பஸ்சும் மோதிக்கொண்ட இடத்தில் மீட்பு பணி நடக்கிறது.
தேனியை அடுத்த வீரபாண்டியில் தனியார் ஆம்னி பஸ்சும், சரக்கு வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.

தேனி மாவட்டம், வீரபாண்டியை அடுத்த உப்பார்பட்டி விலக்கில் இன்று காலை சென்னையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், தேனி நோக்கி வந்த மினி சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் ஆம்னி பஸ் ஓட்டுனரான அனுமந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ், மிகவும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரக்கு வேனில் வந்த மதன், ஹர்வின், மற்றும் பஸ்சில் வந்த பிரேம்குமார்,, உமாசங்கர், ஆகியோரும் பலத்த காயமடைந்து தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீரபாண்டி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்