முல்லை பெரியாறு அணையினை ஒரு கோடிப்பேர் பாதுகாக்கின்றனர் - பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்

முல்லை பெரியாறு அணையினை ஒரு கோடிப்பேர் பாதுகாக்கின்றனர் - பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்
X

குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

முல்லை பெரியாறு அணையினை ஒரு கோடிப்பேர் பாதுகாக்கின்றனர். எங்களை மீறி யாரும் அணையினை தொட முடியாது.

பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் பரப்பப்படும் கருத்துக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் குமுளி செக்போஸ்ட்டினை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. பல நுாறு பேர் பங்கேற்ற இந்த போராட்டத்தை நடத்திய பின்னர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் கேரளாவில் நிறைய பேருக்கு காய்ச்சல் வந்து விடும். இப்போது மழை தொடங்கியதால் அந்த காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

2019ம் ஆண்டு தமிழகத்தில் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 77 தமிழர்கள் இறந்த போது தமிழ்நாட்டில் நடிகர்கள் ஒருவர் கூட ஒரு ரூபாய் கூட தரவில்லை. தற்போது வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கேரள அரசுக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. இடுக்கி எம்.பி., டீன்குரியா கோஸ், எர்ணாகுளம் எம்.பி., ஹைபிஈடன், கொல்லம் எம்.பி., பிரேமச்சந்திரன், ராஜ்யசபை எம்.பி., ஹாரீஸ்பிரான் ஆகியோர் பார்லிமெண்டில் தனித்தீர்மானம் கொண்டு வந்து, அணை உடையப்போகிறது என்று சொல்கிறார்கள். இந்த 999 ஆண்டு கால ஒப்பந்தம் லீஸ் கிடையாது. ஒரு செட்டில்மெண்ட். இந்த செட்டில்மெண்டை எந்த ஒரு அரசோ, நீதிமன்றமோ மாற்ற முடியாது.

கேரள வழக்கறிஞர்கள் பலர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல், வயநாட்டில் நடந்த பேரவினை திசை திருப்ப முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக திசைதிருப்பி விடப்பட்டுள்ளது. வயநாடு பேரழிவுக்கு தமிழகத்தின் பள்ளிகளில் கூட நிதி வசூலிக்கப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் ஒரு துரும்பினை கூட கிள்ளித்தரவில்லை. வயநாடு கலெக்டர் மேகஸ்ரீ தமிழகத்தில் இருந்து வரும் பொருட்களை வைக்க இடமில்லை என்று கூறியிருக்கிறார். அந்த அளவு தமிழகத்தில் இருந்து வயநாட்டிற்கு நிதியும், பொருளும் குவிந்து கொண்டுள்ளது.

கேரள அரசியல்வாதிகள் தமிழக- கேரள உறவை சீர்குலைக்க சாமானிய மக்களை தமிழகத்திற்கு எதிராக திருப்ப முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் 10 வழித்தடங்களில் வழியாக கேரளாவிற்கு வரும் பொருட்களை வைத்து வாழ்வு நடத்தும் கேரள சாமானிய மக்களை தமிழகத்திற்கு எதிராக திருப்பாதீர்கள். பெரியாறு அணைக்கு எதிராக பேசுபவர்கள் முடிந்தால் அணையினை தொட்டுப்பாருங்கள்.

கேரள மக்கள் எங்களின் பங்காளிகள். பெரியாறு அணை 999 ஆண்டுகளும் கம்பீரமாக நிற்கும். அந்த அணையினை யாரும் தொட முடியாது. பெரியாறு அணையினை ஒரு கோடிப்பேர் பாதுகாத்து வருகிறோம். இவர்களை மீறி யாரும் அணையினை தொட முடியாது. கேரள அரசு உண்மையினை புரிந்து கொண்டு பெரியாறு அணைக்கு எதிராக பேசுபவர்களை அடக்கி வைக்க வேண்டும். எங்களுக்கு கேரள மக்கள் மீது உள்ள அன்பை புரிந்து கொள்ளுங்கள். பெரியாறு அணைக்கு எதிராக பேசிய அத்தனை பேரும், அழிந்து போனார்கள். இப்போது பேசுபவர்களும் காணாமல் போய் விடுவார்கள். பெரியாறு அணை மீது கை வைக்க நினைப்பவர்களை கேரள அரசு கைது செய்ய வேண்டும். கேரள யூடிபர்களை கட்டுப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil