கந்து வட்டிக்கு ஆதரவு தரும் போடி இன்ஸ்பெக்டர் மீது கலெக்டரிடம் புகார்

கந்து வட்டிக்கு ஆதரவு தரும் போடி இன்ஸ்பெக்டர் மீது  கலெக்டரிடம் புகார்
X
போடி டவுன் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சிவா பாரத இந்து மக்கள் இயக்கத்தினர் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனை சந்தித்தனர். அவரிடம் கொடுத்த மனுவில் 'போடி டவுன் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். கந்துவட்டிக்காரர்களின் கொடுமைகளை பற்றி பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தால் கண்டுகொள்ளாமல், கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர். இந்த மனுவை எஸ்.பி.,யிடம் அனுப்பி விசாரிப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

Tags

Next Story
நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் ரூ.1000 - ரூ.5000 அபராதம்