இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆட்டோவில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
Lord Ganesha Chaturthi- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொருளாளரும், யோகா ஆசிரியருமான செந்தில்குமார் ஜீ இறைவணக்கம் பாடினார். தேனி நகரதலைவர் செல்வபாண்டியன் ஜீ தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணியின் மாவட்டசெயலாளர் இராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து எழுச்சி முன்னணியின் நிறுவன தலைவர் பொன்.இரவி ஜீ, மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ, செயலாளர் சோலைராஜன் ஜீ, மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள், இந்து எழுச்சி ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் ஆட்டோ முன்னணி தேனி நகர தலைவர் செந்தில்குமார் ஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறுவன தலைவர் பொன்.இரவி ஜீ ஆட்டோக்களில் இந்து எழுச்சி ஆட்டோ முன்னணி ஸ்டிக்கர்களை ஒட்டி போக்குவரத்து விதிமுறைகளை மதித்து ஆட்டோக்களை இயக்கி, தொண்டு உள்ளத்தோடு நியாயமான கட்டணங்களை பெற்று மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற வேண்டும் என பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினர்களாக கம்பம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்திவிழா கமிட்டி தலைவர்கள் இராஜகுருபாண்டியன் ஜீ, மாயா லோகநாதன் ஜீ , மற்றும் கம்பம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி பொறுப்பாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட ஸ்ரீ விநாயகர் திருமேனிகளை வைத்து வழிபாடு செய்வது எனவும்,கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் விரதம் இருந்து விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், ஊர்வலத்தில் கிழங்கு மாவு காகித கூழினால் தயாரிக்கப்பட்ட ஸ்ரீவிநாயகர் திருமேனிகளை வைத்து வழிபாடு செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஜீ நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu