தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 54 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 54 ஆக அதிகரிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இதுவரை ஒமிக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக பி.ஏ.5, பி.ஏ.3.8 என்ற வீரிய ரக உருமாறிய ஒமிக்ரான் பரவி வருகிறது. இந்த கிருமியால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இருதயம், கிட்னி, புற்றுநோய், பக்கவாதம், தோல்நோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கு கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமையிலும், வீடுகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இணை நோய்கள் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது