தேனியில் பாழடைந்து கிடக்கும் அரசு அலுவலகங்கள்

தேனியில் பாழடைந்து கிடக்கும் அரசு அலுவலகங்கள்
X

தேனி தினசரி மார்க்கெட் பகுதியில் பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கட்டடம்.

தேனி மாவட்டத்தில் பயன்பாடற்ற பழைய அரசு அலுவலகங்கள் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி உள்ளது.

தேனியில் வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடம் பாழடைந்து கிடக்கிறது. இதேபோல் ஏராளமான கட்டடங்கள் பயனற்கு கிடக்கின்றன. இரவில் சமூக விரோதிகளுக்கு வசதியான இடமாக மாறியுள்ளது.

தேனியில் தினசரி மார்க்கெட் வளாகத்தில் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் தேனி வேளாண்மை விற்பனைக்குழு அலுவலக பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டது. அதன் பின்னர் வேறு எந்த பயன்பாட்டிற்கும் இந்த கட்டடம் பயன்படுத்தப்படவில்லை.

இந்த கட்டடத்திற்கு பூட்டு போட்டு விட்டனர். பல ஆண்டுகளாக இந்த கட்டடம் பாழடைந்து கிடக்கிறது. இதனால் புதர்மண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் தங்களின் வசதிக்கு பயன்படுத்தி வருகின்றனர். அரசு அலுவலகம் செயல்பட்ட இடம் தற்போது சமூக விரோத செயல்பாடுகளுக்கு பயன்படுவது இப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இந்த கட்டடத்தை வேறு ஏதாவது ஒரு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் வலியறுத்தி உள்ளனர். இந்த கட்டடடம் மட்டுமின்றி தேனி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அரசு அலுவலக கட்டடங்கள் பயனற்ற நிலையில் கிடக்கின்றன. கட்டடம் பலகீனமாகி விட்டதாலும், வேறு இடத்திற்கு அலுவலகங்கள் மாற்றப்பட்டு விட்டதாலும், பழைய அலுவலகங்கள் பயனற்று கிடக்கின்றன. இந்த அலுவலகங்களை மூடி விட்டனர்.

தற்போது செயல்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்களே பராமரிப்பின்றி கிடக்கும் போது, மற்ற அலுவலகங்களை அதாவது பயனற்ற பழைய அலுவலகங்களை எப்படி பராமரிப்பார்கள். பராமரிக்காவிட்டாலும் பரவாயில்லை, சமூக விரோதிகளின் பிடியில் இருந்தும மீட்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!