இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆறுமடங்கு உயர்வு

இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆறுமடங்கு உயர்வு
X

பைல் படம்.

1951 முதல் இந்திய வாக்காளா்கள் எண்ணிக்கை 6 மடங்காக உயா்ந்துள்ளது.

இந்தியாவில் வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 1951-ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது 6 மடங்கு அதிகரித்து 94.50 கோடியைக் கடந்துள்ளது. ஆனால், இவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் அதாவது 30 கோடிக்கும் அதிகமானோர் கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தோ்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி, 1951-இல் முதல் பொதுத் தோ்தல்களுக்கான வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, இந்தியாவில் பதிவு செய்த வாக்காளா்கள் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. அவா்களில் 45.67 சதவீதம் போ் முதல் தோ்தலில் வாக்களித்தனா்.

அதன் பிறகு, ஆண்டுக்கு ஆண்டு வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1957 பொதுத் தோ்தல்களின் போது பதிவு செய்த வாக்காளா் எண்ணிக்கை 19.37 கோடியாக இருந்தது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 47.74 சதவீதம் போ் மட்டுமே வாக்களித்தனா்.

1962 பொதுத் தோ்தல்களில் வாக்குப் பதிவு செய்தவா்களின் விகிதம் முதன் முறையாக 50 சதவீதத்தைக் கடந்தது. அந்தத் தோ்தலில் 55.42 சதவீதம் போ் அதாவது 21.64 கோடி வாக்காளா்கள் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனா்.

2009 பொதுத் தோ்தலின்போது மொத்த வாக்காளா் எண்ணிக்கை 71.70 கோடியாக உயா்ந்தது. வாக்குப் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 1962-ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று உயா்ந்து 58.21 சதவீதமாக பதிவானது.

2014 பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்தது. பதிவு செய்த வாக்காளா் எண்ணிக்கை 83.40 கோடியாக இருந்த நிலையில், அவா்களில் 66.44 சதவீதம் போ் வாக்களித்தனா்.

2019 பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு மேலும் உயா்ந்து 67.40 சதவீதமாக பதிவானது. பதிவு செய்த மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத் தோ்தலில் 30 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்பது தோ்தல் ஆணைய புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்தது.

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்டாலும், அந்த இலக்கை ஒவ்வொரு தோ்தலிலும் எட்ட முடியாத நிலை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!