'கிடு கிடு' என உயரும் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்கும் போலீஸ்அதிகாரிகள் எண்ணிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் வீட்டில் இருந்தே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த விஷயத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.எஸ்.ஐ., உட்பட மூன்று பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு முன்னும் ஒழுங்கு நடவடிக்கையில் பல போலீசார் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக நான்கு பேர் சிக்கி உள்ளனர். மது போதையில் பணிக்கு வந்ததாக கடமலைக்குண்டு எஸ்.ஐ., ஜெயக்குமார், மணல் திருடர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ராஜதானி எஸ்.ஐ., ராமர்பாண்டியன் ஆகியோர் ராமனாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போடியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கொன்ற கும்பல் தப்பிச் செல்லும் போது, துரத்தி பிடிக்காமல் சுணக்கம் காட்டிய போலீஸ்காரர் விக்ரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தன் கார் மீது மோதிய ஒரு தனியார் பஸ்ஸை சிறை பிடித்து, அந்த பஸ்சில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்த தேனி ஆயுதப்படை போலீஸ்காரர் கதிரேசனும் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கைதாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu