புகையிலை பொருள் விற்க மாட்டோம்! தேனி சிறு வியாபாரிகள் தீர்மானம்
தேனியில் சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட சிறு, பலசரக்கு வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆரோக்கிய பிச்சை முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் இராஜபாண்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் கலந்து கொண்டு வழிகாட்டி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆலோசகர் நவநீதன் பேசினார்.
நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நடைபெற்றன. சங்க உறுப்பினர்கள் அனைவரும் கடைகளில் தரமான பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்த கூடாது. அரசு தடை செய்துள்ள "குட்கா" போன்ற புகையிலையை எக்காரணம் கொண்டும், யாரும் விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்து காவல்துறையிடம் சிக்கினால் சங்கம் தலையிடதாது. சங்கம் இந்த பிரச்னைகளுக்கெல்லாம் வந்து உறுப்பினர்களை காப்பாற்ற முயற்சிக்காது.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தவறாமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu