அக். 30ல் துவங்கும் வடகிழக்கு பருவமழை..
Vada Kilakku Paruva Malai
Vada Kilakku Paruva Malai-தென்மேற்கு பருவமழை காலத்தில், ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையை கொடுத்த பின்னர் இமயமலை மேல் மோதி திரும்புவதால், இதை 'பின்னடையும் பருவகாற்று' என்று அழைக்கிறோம். தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த பின்னரே, வடகிழக்கு பருவமழை காலம் துவங்க சாதகமான சூழல் நிலவும். இந்தியாவின் வடகிழக்கு திசையிலிருந்து வீசும் இக்காற்றானது, வங்ககடலை அடையும் போது ஈரப்பதத்தை பெற்று தமிழகத்திற்கு அதிக மழையை தருகிறது.
இந்தியாவில், பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையை நம்பியிருக்கும் போது தமிழகம் மட்டுமே வடகிழக்கு பருவமழையை நம்பியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டு மழைப் பொழிவில் 50-60% மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பெறுகிறது. வடகிழக்கு பருவமழை சராசரியாக, அக்டோபர் 20ம் தேதி துவங்கும். அக்டோபர் 20ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது ஒரு வாரத்திற்கு பின்போ மழை துவங்கினால், வடகிழக்கு பருவமழை இயல்பான வழக்கமான நேரத்தில் தொடங்கியதாக கருதப்படும். தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு அக்டோபர் 30 ம்தேதி பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை தாமதமாக துவங்குவதால், தமிழகத்தில் மழை இருக்காது என்று கருதக்கூடாது. தமிழகத்தில் மழை தாமதமாக தொடங்கிய ஆண்டுகளில் கூட அதிகளவு பெய்துள்ளது.
கடந்த 1998 ம் ஆண்டு, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ம் தேதி தாமதமாக துவங்கியது .அந்த வருடம் தமிழகம் 30% அதிக மழையை பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ம் தேதி துவங்கியது .அந்தாண்டு தமிழகத்தில் இயல்பைவிட 38% அதிக மழையை பெற்றது.
2015 ம் ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28 ம் தேதி துவங்கியது. அப்போது இயல்பை விட 51% மழையை தமிழகம் பெற்றது. வடகிழக்கு பருவமழையின் போது கடந்த 11 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் மட்டுமே தமிழகம் அதிக மழையை பெற்றுள்ளது. மீதி 6 ஆண்டுகள் தமிழகம் மழை பற்றாக்குறையை சந்தித்துள்ளது. நாட்டிலேயே தமிழகம் மட்டுமே வடகிழக்கு பருவமழையை அதிகம் நம்பியிருக்கிறது. இப்படி இருக்கும் போது கடந்த 11ஆண்டுகளில் 6 ஆண்டுகள் மழை பற்றாக்குறையை சந்தித்தது.
ஒட்டுமொத்த தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 25 ம்தேதி முதல் அக்டோபர் 28 ம்தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இந்த நாட்களில் பகல் நேரத்தில் வெயிலும் அதிகாலையில் பனிப்பொழிவும் இருக்கும். அதன் பின்னர் அக்டோபர் 29 ம் தேதிக்கு பின்னர் பருவமழை துவங்க சாதகமான சூழல் உருவாகும். அக்டோபர் 30 ம்தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிடும்.
நவம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பருவமழை மிக தீவிரமடையும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை அக்டோபர் 30 ம்தேதி முதல் மழை தொடங்கும் நவம்பர் முதல் வாரத்தில் பருவமழை தீவிரமடையும். நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேதாரண்யம், ராமேஸ்வரம் திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் குறுகிய காலக்கட்டத்தில் அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து அத்தனை மாவட்டங்களிலும் தமிழக அரசு வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu