தீபாவளிக்கு பின்னரும் விலை குறையாததால் தேனி மாவட்ட அசைவ பிரியர்கள் அதிருப்தி

தீபாவளிக்கு பின்னரும் விலை குறையாததால் தேனி மாவட்ட அசைவ பிரியர்கள் அதிருப்தி
X

பைல் படம்.

நாட்டுக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், மீன் விலை அதிகரித்துள்ளதாலும் அசைவ பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தீபாவளியன்று உயர்ந்த ஆட்டு இறைச்சி விலை, ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை குறையவில்லை. நாட்டுக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், மீன் விலையும் அதிகரித்துள்ளதாலும் அசைவ பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த மாதம்் தீபாவளி அன்று ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 1100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி முடிந்ததும் விலை மீண்டும் கிலோ 600 ரூபாயாக குறையும் என அசைவ பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கிலோ 1000க்கு கீழ் குறையவில்லை. அதுவும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 1000 ரூபாய். புதிய வாடிக்கையாளர்களுக்கு கிலோ 1100 ரூபாய் என இறைச்சிக்கடையினர் விலை நிர்ணயித்துள்ளனர்.

இது குறித்து அசைவ பிரியர்கள் கூறியதாவது: தற்போது பிராய்லர் கோழி இறைச்சி தொடர்பாக சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல்களால் பிராய்லர் இறைச்சி வாங்க அச்சமாக உள்ளது. சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப முடியவில்லை.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை அரசும், கால்நடைத்துறையும் உறுதிப்படுத்த மறுக்கிறது. இதனால் பிராய்லர் இறைச்சி வாங்குவதை குறைத்துள்ளோம். மாறாக நாட்டுக்கோழி வாங்கலாம் என்றால், ஒரிஜனல் நாட்டுக்கோழி எங்கும் கிடைக்கவில்லை. பண்ணைகளில் வளர்க்கப்படும் ‛கிராஸ்’ ரக நாட்டுக்கோழிகள் தான் கிடைக்கிறது. இதுவும் ஒரு கிலோ 600 ரூபாய் என்பதால் இவ்வளவு விலை கொடுக்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கிலோ 160 ரூபாய்க்கு விற்ற அணை மற்றும் கண்மாய்களில் பிடிக்கப்படும் கட்லா மீன் சில வாரங்களாக கிலோ 200 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் இறைச்சி விலை குறையும். இந்த ஆண்டு குறையவில்லை. இதனால் கூடுதல் விலை கொடுத்து ஏமாற்றத்துடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil