நாளையுடன் முடிகிறது மனுதாக்கல்: இன்றும், நாளையும் விறுவிறுப்பு இருக்கும்

நாளையுடன் முடிகிறது மனுதாக்கல்: இன்றும், நாளையும் விறுவிறுப்பு இருக்கும்
X
தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கலில் விறுவிறுப்பு இருக்கும் என்பதால் உள்ளாட்சி நி ர்வாகங்கள் தயாராக உள்ளன

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளுக்கு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. தி.மு.க.,வில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே பலரும் மனுதாக்கல் செய்து விட்டனர்.

அதேபோல் அ.தி.மு.க., உட்பட பிற கட்சியினரும், சுயேட்சைகளும் மனுதாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் நேற்று மாலை வரை மனுதாக்கல் மந்தநிலைலேயே இருந்தது.

இந்நிலையில் நாளையுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. எனவே இன்றும், நாளையும் மனுதாக்கலில் விறுவிறுப்பு இருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!