2 நாட்களாக மழையில்லாததால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு

2 நாட்களாக மழையில்லாததால்   முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு
X

முல்லை பெரியாறு அணை.

Mullai Periyar Dam Level Today -கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் குறைய தொடங்கி உள்ளது.

Mullai Periyar Dam Level Today -தேனி மாவட்டத்திலும், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 958 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1867 கனஅடி நீர் தமிழகப்பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், நீர் மட்டம் குறைந்து இன்று காலை 137.40 அடியாக இருந்தது. வைகை அணைக்கு விநாடிக்கு 1984 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து இதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 70.36 அடியாக உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story