திசை மாறும் நீர்ப்பாசன திட்டங்கள் : தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டம்..!
பரம்பிக்குளம் அணை (கோப்பு படம்)
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன கால்வாய் (பி.ஏ.பி.,) திட்டத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகள், கடைகோடி விவசாயிகள் உள்ள பகுதிகளாக உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, அறிவிக்கப்பட்ட அளவு தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை; 'இடையிடையே பல இடங்களில் நடக்கும் தண்ணீர் திருட்டு தான், இதற்கு காரணம்' என, விவசாய அமைப்பினர் கூறி வருகின்றனர்.
'தண்ணீர் திருட்டை தடுத்து, தடையின்றி பாசன நீர் வினியோகிக்க வேண்டும். சிதிலமடைந்துள்ள பாசன மற்றும் கிளை கால்வாயை பராமரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை கூட போராட்ட அறிவிப்பின் வாயிலாகவே, அங்குள்ள விவசாய அமைப்பினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்ட விவசாயிகள், தண்ணீர் திருட்டு தொடர்பான ஆதாரங்களை வாதமாக வைத்து, விடுதலை பெற்றனர்.
இது, ஆளுங்கட்சிக்கு, பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தண்ணீர் திருட்டு தடுக்கப்படாததை கண்டித்து, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும், 27ல், பெருந்திரள் முற்றுகை போராட்டத்தை மேற்கொள்ள பி.ஏ.பி, வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயம் - வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தற்போது கையில் எடுத்துள்ளார். இப்பிரச்னையை சட்டசபை வரை கொண்டு சென்றிருப்பது, கூடுதல் கவனம் பெறுகிறது. எனவே, நீர்ப்பாசன திட்டங்கள், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திசை மாறி வரும் நிலையில், அரசின் செயல்பாடு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu