ஏன் பெரியகுளம் பஸ் ஸ்டாண்டுக்குள் அரசு பஸ்கள் வருவதில்லை? ஏன் புறக்கணிப்பு?

ஏன் பெரியகுளம் பஸ் ஸ்டாண்டுக்குள் அரசு பஸ்கள் வருவதில்லை? ஏன் புறக்கணிப்பு?
X

பெரியகுளம் பேருந்து நிலையம் (கோப்பு படம்)

பெரியகுளம் பஸ்ஸ்டாண்டிற்குள் சென்று வராத பஸ்களை பெரியகுளம் தி.மு.க.,வினர் நிறுத்தி பஸ்ஸ்டாண்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று வராமல் பஸ்ஸ்டாண்டின் முகப்பு வாயிலிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்தன.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து பல முறை மக்கள் முறையிட்டும் அரசு பஸ்கள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் பெரியகுளம் தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் சில கவுன்சிலர்கள் பஸ் ஸ்டாண்ட் முகப்பில் நின்று பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத பஸ்களை நிறுத்தி, பஸ் ஸ்டாண்டிற்குள் கண்டிப்பாக சென்று வர வேண்டும் என அறிவுறுத்தினர். ஆளும் கட்சியினரின் அறிவுரையினை ஏற்று பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வந்தன. இது ஒரு நாளோடு முடிந்து விடுமா? தினமும் சென்று வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story