40 ஆண்டுகளுக்கு பிறகு எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக முடிந்த தேர்தல்

40 ஆண்டுகளுக்கு பிறகு எந்த சலசலப்பும்  இல்லாமல் அமைதியாக முடிந்த தேர்தல்
X
தேனி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் எந்த மோதலும், சலசலப்பும் இன்றி முடிந்ததால் போலீஸார் நிம்மதி

தேனி மாவட்டம், பழைய மதுரை மாவட்டத்தில் இருந்த போதும், தனியாக பிரிந்து 26 ஆண்டுகள் ஆன பின்பும் இந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தான் மோதல் இல்லாமல் முடிந்துள்ளது. வழக்கமாக சென்சிடிவ் மாவட்டமாக இருந்த தேனி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, ஜாதி, கட்சி ரீதியான மோதல்கள் இருந்து கொண்டே இருந்தது. அதுவும் தேர்தல் காலங்களில் பெரும் தலைவலி இருக்கும். வழக்கத்திற்கு மாறாக போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் மட்டுமே எந்த மோதலும், எங்குமே சிறு சலசலப்பும் இன்றி நடந்து முடிந்துள்ளது. மிக குறைந்த அளவே தேர்தல் விதிமீறல் வழக்குகளும் பதிவாகி உள்ளன என போலீஸ் நிர்வாகம் நிம்மதி தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!