தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா தொற்று எவருக்கும் கண்டறியப்படவில்லை

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா தொற்று எவருக்கும் கண்டறியப்படவில்லை
X
தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா ஜீரோ தொற்று என பதிவாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பரிசோதனையி்ல் சைபர் (யாருக்கும் இல்லை) என்ற நிலையே நீடித்து வருகிறது.

இன்று காலை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 563 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மாதம் 14 நாளில் 10 நாட்கள் கொரோனா தொற்று கண்டறியப்படாத நாட்களாக உள்ளன. மீதம் நான்கு நாட்கள் ஒருவர் அல்லது இருவர் என்ற நிலையில் தான் தொற்று கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.மாவட்டத்தில் தகுதி உள்ள நபர்களில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டதால், தொற்று பெரும் கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!