அருவிகளில் குளிக்க வாய்ப்பில்லையா? தேனி வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
Theni News Today -தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்துள்ளது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. தவிர திடீர் என சில மணி நேரம் மழை பெய்கிறது. பல நேரங்களில் பரவலாக மழை இல்லாமல், வனப்பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டும் திறந்த நிலையில், ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி நீர் சென்றது. மதுரையின் இருகரைகளின் உயர விளிம்புகளையும் தொட்டு தண்ணீர் சென்றது மக்களை ஆச்சர்யப்பட வைத்தது. இந்த தண்ணீர் ஒரு நாள் இரவில் சில மணி நேரத்தில் எங்கிருந்து வந்தது என்பதற்கான விடையை யாராலும் கண்டறியமுடியவில்லை.
தவிர கும்பக்கரை அருவியாகட்டும், சுருளி அருவியாகட்டும், சின்னசுருளி அருவியாகட்டும், கொட்டகுடி அணைக்கரைப்பட்டி தடுப்பணையாகட்டும் எந்த நேரம் வெள்ளம் வரும் என்பதை வனத்துறையால் கணிக்கவே முடியவில்லை. திடீரென போடி மெட்டு மலைப்பாதையில் குறிப்பிட்ட சில இடங்களி்ல் பெய்த மழை இரவு முழுவதம் போக்குவரத்தை நிறுத்தி விட்டது.
இப்படி மழைப்பொழிவினை கணிக்கவே முடியாத நிலை உள்ளதால் சுருளி அருவியில் இரண்டு மாதங்களாக யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. சின்ன சுருளியிலும் இதே நிலை தான் உள்ளது. கும்பக்கரையில் மட்டும் வனத்துறையினர் முழு நேர பாதுகாப்பு பணியில் இருப்பதால், நீர் குறைந்த நேரம் மட்டும் குளிக்க அனுமதிக்கின்றனர். குளிக்கும் பயணிகளை திடீரென வெள்ளம் வரப்போகிறது என வெளியேற்றுகின்றனர். இப்படி குழப்பமான நிலை நிலவுவதால், தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க வாய்ப்பு இல்லாததால், அதிருப்தி அடைந்து திரும்ப செல்கின்றனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu