பாஜக கூட்டணியில் விரிசல் செம கடுப்பில் டெல்லி

பாஜக கூட்டணியில் விரிசல்  செம கடுப்பில் டெல்லி
X
தமிழ்நாட்டில் அதிமுக -பாஜக இடையிலான மோதல் காரணமாக டெல்லி பாஜக செம டென்ஷனில் இருக்கிறதாம்.

பொதுவாக இது போன்ற விஷயங்களை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக இந்த முறை கொஞ்சம் உதறலில் இருக்கிறதாம். அந்த உதறலுக்கு பின் காரணம் இல்லாமல் இல்லை.

இதற்கு முன்பே அதிமுகவை பல முறை டெல்லி பாஜக டீல் செய்துள்ளது. ஜெயலலிதா இறந்ததில் இருந்தே டெல்லி பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவை ஒரு வகையில் கட்டுப்படுத்தி தான் வந்தது. ஆனால் இந்த முறை டெல்லி பாஜகவே கொஞ்சம் ஆடிபோய் விட்டதாம். அதற்கு காரணம் வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் தான் இந்த பிரச்னைக்கு காரணம். இதில் மத்திய பிரதேசத்தில் 4 முறை ஆட்சியில் இருந்த பாஜகவிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு உள்ளது. கடந்த முறையே கஷ்டப்பட்டு ஆட்சிக்கு வர முடியாமல், அதன் பின் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது பாஜக.

இந்த முறை கண்டிப்பாக காங்கிரசின் இந்திய கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் வருகின்றன. இப்படி இருக்க இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் காங்கிரசில் குழப்பம் ஏற்படும் என்று பாஜக நினைத்தது நடக்கவில்லை. அசோக் கெலாட் - சச்சின் பைலட் சண்டை போடவில்லை.

அங்கே தேர்தலிலும் காங்கிரஸ் தீவிரமாக பணிகளை செய்கிறது. அதோடு இல்லாமல் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி வரும் வாய்ப்புகள் உள்ளன.

தெலுங்கானாவில் பாஜக வளர வேண்டிய இடத்தில் காங்கிரஸ் வளர்ந்து உள்ளது. அதோடு அங்கே பிஆர்எஸ் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், பாஜக மூன்றாம் இடம் பிடிக்கும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மிசோராம், சத்தீஸ்கரில் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை இல்லை. காங்கிரஸின் வாக்குறுதிகள், இந்தியா கூட்டணி அங்கே பாஜகவிற்கு எதிராக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில் தான் டெல்லி பாஜக தலைவர்கள் டென்ஷனில் இருக்கிறார்களாம். முக்கியமாக அமித் ஷா - நட்டா ஆகியோர் கடந்த 2 வாரமாக இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம். அடுத்த சில வாரங்களுக்கு இது மட்டுமே அவர்கள் குறியாம். அதோடு இல்லாமல் மேலிடத்தில் டாப் தலைவர்களுக்கு கூட இதனால் பிரஷர் எகிறி உள்ளதாம்.

அதிலும் மகளிர் இடஒதுக்கீடு இப்போது சாத்தியம் இல்லை. இதனால் அந்த மசோதா பெரிதாக வாக்குகளை தவறாது. இன்னொரு பக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல் இல்லை. அதேபோல் ஜாதி வாரி கணக்கெடுப்பும் பெரிய அதிருப்தியை பாஜகவிற்கு எதிராக கொடுத்துள்ளது. இது எல்லாம் சேர்த்து தான் தற்போது பாஜகவை பிரஷருக்கு தள்ளி உள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக முறிவு அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அதிமுக இப்படி கூட்டணியை முறித்தது என்டிஏ கூட்டணி உடைந்தது போல வடக்கில் சித்தரிக்கப்படுகிறது. அதோடு பாஜகவுடன் நெருக்கமாக இருந்த ஒரே பெரிய கட்சி அதிமுக தான். அவர்களும் சென்றதால் கிட்டத்தட்ட பாஜக தனித்து விடப்பட்டது போல ஆகிவிட்டது.

இதனால் தான் ஏற்கெனவே இருக்கிற பிரச்சனை போதாது என்று இந்த அதிமுக - பாஜக கூட்டணி பிரச்னையை தூக்கிக் கொண்டு வந்துள்ளனர் என்று டெல்லி பாஜக கோபம் கொண்டுள்ளதாம். இவர்கள் கூட்டணியை முறிக்காமல், கூட்டணியில் குழப்பம் செய்யாமல் சில காலம் இருக்க மாட்டார்களா? தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறதே இப்போதே என்ன அவசரம்.. இவர்களுக்கு எல்லாம் ஆலோசனை சொல்வது யார் என்று டெல்லி செம கடுப்பில் இருக்கிறதாம். முக்கியமாக டெல்லி தலைவர்கள் பாஜக - அதிமுக இரண்டு தரப்பிலும் சிலர் மீது கோபத்தில் உள்ளனராம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!