குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா..?

குறைந்த விலையில் எலெக்ட்ரிக்  ஸ்கூட்டர் வாங்கணுமா..?
X

பைல் படம்

நாடு முழுவதும் நாளுக்கு நாள் மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றால் போல் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களுடன் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வரிசையில் ஆட்டோமொபைல் சந்தைக்குள் புதிதாக களம் இறங்கியிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் எம்.எக்ஸ்.மோட்டா(MX moto). புதிய நிறுவனம் என்பதால், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு பல நவீன வசதிகளுடன் வாகனங்களைத் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் கூட எம்.எக்ஸ் 9என்ற எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்தது. தற்போது எம்.எக்ஸ்.வி ஈகோ(MXV ECO) என்ற பெயரில் சந்தைக்கு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விவரங்களை இங்கே அறிந்துக்கொள்வோம்.

MXV ECO-வின் அம்சங்கள்: எம்.எக்ஸ் மோட்டா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் இந்த பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் 80 கி.மீ - 100 கி.மீ தொலைவிற்கு உங்களால் இந்த மின்சார ஸ்கூட்டரை இயக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் ஷோரூம் விலை ரூ.84,999 ஆகும். இந்த எலெக்டரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 3.2kWh லைஃப் பிஒ4 பேட்டரிகளை தனியாக வெளியே எடுக்கக்கூடிய வசதிகள் உள்ளது. 3,000 வாட் மின்சார மோட்டாரைப் பெறுகிறது. ஒரு மணி நேரத்திற்குள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும் என்கிறது எம்.எஸ் மோட்டோ நிறுவனம்.

இதோடு மட்டுமின்றி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 105 - 120 கிமீ ரேஞ்சிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 94,999 ஆகும். 80 -100 கிமீ ரேஞ்சை கொண்ட வெர்சனில் அதிகபட்சமாக மணிக்கு 70 kmph வேகத்தில் இயக்க முடியும். மேலும் 105- 120 கிமீ ரேஞ்சைக் கொண்ட வெர்சனின் டாப் ஸ்பீட் 100 kmph ஆகும். அதிகபட்சமாக 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 38 ஆம்பியர் கண்ட்ரோலர் மற்றும் ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்களும் இந்த மின்சார ஸ்கூட்டரில் உள்ளது. மேலும் இந்த மின்சார ஸ்கூட்டரின் முன்சக்கர டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பல்வேறு அம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. நிச்சயம் எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் இந்த ஸ்கூட்டரை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறலாம்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!