கலெக்டருக்கு சவால் விடும் தொழில்நுட்பம், வியூகம் வகுக்கும் காவல்துறை

கலெக்டருக்கு சவால் விடும் தொழில்நுட்பம்,  வியூகம் வகுக்கும் காவல்துறை
தேனி கலெக்டர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப்களில் தகவல் அனுப்பும் கும்பலை பிடிக்க காவல்துறையினர் புதிய வியூகம் வகுத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி கலெக்டர் முரளீதரன் படத்தை புரொபைல் பிக்சராக வைத்து ஒரு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி சில அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் வந்தது. இது மோசடி நபர்களின் வேலை என்பதை கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அதன் பின்னர் அந்த மோசடி நபர் வேறு நம்பரை பயன்படுத்தினார். மீண்டும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இதன் பின்னர் இந்த பிரச்னை இல்லாமல் இருந்தது. இருப்பினும் காவல்துறையினர் தொடர்ச்சியாக அந்த மர்ம நபரை பற்றிய விசாரணையை நடத்தி வந்தனர்.

தற்போதய தொழில்நுட்பங்களில் தவறு செய்பவர்கள் மிகவும் கை தேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களை கண்டறிவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தேனி கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'எனக்கு அரசு வழங்கிய நம்பர் 94441 72000. இந்த நம்பரை தவிர வேறு எந்த நம்பரையும் நான் பயன்படுத்துவதில்லை. எனவே இந்த நம்பரை தவிர வேறு நம்பர்களில் எனது பெயரில் வரும் எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம்' எனக்கூறியுள்ளார்.

கலெக்டரின் இந்த அறிவிப்பின் பின்னணியி்ல் வேறு ஒரு புதிய வியூகம் உள்ளது. கலெக்டர் பெயரை தவறாக பயன்படுத்திய குற்றவாளியை பிடிக்க புதிய வியூகம் உருவாக்கப்பட்டு வலை விரிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள் ஆனாலும் இந்த விஷயத்தில் குற்றவாளி எந்த உயர் தொழில்நுட்ப சூழலில் இருந்தாலும், காவல்துறை பிடியில் சிக்கி கம்பி எண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை என இந்த விஷயத்தை கவனித்து வரும் அரசு அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags

Next Story