தேனி வெங்கலாநகரில் புதிய ரேஷன் கடை திறப்பு

தேனி வெங்கலாநகரில் புதிய ரேஷன் கடை திறப்பு
X

வெங்கலாநகரில் புதிதாக திறக்கப்பட்ட ரேஷன் கடையில், அதனை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்ட நிர்வாகிகள் உள்ளனர்.

தேனி வெங்கலாநகரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டதன் மூலம் மக்கள் எளிதில் ரேஷன் பொருட்கள் பெறும் வசதி கிடைத்துள்ளது.

தேனியில் 7வது வார்டில் வெங்கலாநகர், கக்கன்ஜீகாலனி, ஒண்டிவீரன் காலணி உட்பட பல குடியிருப்புகள் உள்ளன. இந்த மக்களுக்கு 8வது வார்டில் அல்லிநகரம் பெருமாள் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடை எண் 3ல் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த கடையில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேல் பொருட்கள் வழங்கப்பட்டன.

7வது வார்டு மக்கள் இந்த கடைக்கு வர சுமார் 2 கி.மீ., துாரம் நடக்க வேண்டும். அதுவும் முறையான பாதை வசதியும் இல்லை. அப்படி சிரமப்பட்டு நடந்து வந்தால் கடையில் பொருட்களை வழங்குவார்களாக என்பது தெரியாது. எந்த பொருள் கிடைக்கும் என்பதும் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

7வது வார்டு கவுன்சிலர் செல்வி பாண்டி இந்த பிரச்னை குறித்து நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா கவனத்திற்கு கொண்டு சென்றார். இவர்களுடன் இந்து எழுச்சி முன்னணி தலைமை நிர்வாகி ராமராஜ் உடன் சேர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக 7வது வார்டிலேயே வெங்கலாநகர் 3வது தெருவில் ரேஷன் கடை திறக்கப்பட்டது.

இந்த கடையில் 500 கார்டுகள் திறக்கப்பட்டன. இந்த கடை தொடக்கவிழாவில் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், கவுன்சிலர் செல்விபாண்டி, இந்து எழுச்சி முன்னணி தலைவர் ராமராஜ், முயற்சிகள் மேற்கொண்ட முக்கிய பிரமுகர்கள் ஒச்சம்மாள், அபுதாகீர் உட்பட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடை விற்பனையாளர் ஹேமலதா செய்திருந்தார். புதிய ரேஷன் கடை கிளையில் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பெரிய ஆறுதல் கிடைத்துள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare