உத்தமபாளையத்திற்கு என்ன தேவை?
தேனி மாவட்டம், உத்தமபாளையம் (கோப்பு படம்)
தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில் தேனி மாவட்டம், உத்தமபாளையத்திற்கு என்னே தேவைகள் உள்ளன என்பதற்கு நகர்நல சங்கத்தினர் அரசியல் கட்சியினருக்கு கூறி இருப்பதாவது :
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் அரசியல் கட்சியின் குழுவிற்கு உத்தமபாளையம் நகரத்தின் முக்கிய தேவைகள் அவசியம் அவசரமும் குறித்து நாங்கள் ஒரு பட்டியல் வழங்கி உள்ளோம்.
1. அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களும் வெளியூர் டாக்டர்களும் பணிபுரிந்து திடீரென மாறுதலாகி சென்று விடுகின்றனர். உத்தமபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் படித்த டாக்டர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டுகிறோம்.
2. உத்தமபாளையம் வளர்ச்சியடைந்த ஜனநெருக்கம் மிகுந்த நகரமாக உள்ளதால். வாலிபர்கள் மிகுந்த பகுதியாதலால் விளையாட்டு மைதானம் பாளையம் - கோம்பைக்கு இடையில் அமைத்து தர வேண்டுகிறோம்.
3. நிரந்தரமாக அரசு பொது நூலக கட்டிடம் அமைத்து தர வேண்டும்.
4. முல்லைபெரியாறின் இரு கரைகளிலும் உள்ள ஆக்ரமிப்புகளையும் அடந்த செடிகொடிகளையும் மண்மேடுகளையும் அகற்றி விபத்துகள் ஏற்பட்டாலும் உடனே காப்பாற்றுவதற்கு ஏற்ற வகையில் இருபக்கம் ஒழுங்குபடுத்தவும் பொதுப்பணித்துறையினர் முன்வர வேண்டும்.
5. கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தை உத்தமபாளையத்தில் இருந்து வேறு ஊருக்கு மாற்றாமல், உத்தமபாளையத்திலேயே இயங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. RTO அலுவலகத்திற்க்கு மக்கள் வந்து செல்லவும் வாகனங்கள் சிரமமின்றி வந்து செல்லவும் விசாலமான இடம் தேர்வு செய்து அலுவலகத்தை இடமாற்றம் செய்யவும்.
7. அரசு மேல்நிலை பள்ளியின் பழைய கட்டடத்தை மாற்றி நிலையான புதிய கட்டடம் கட்ட வேண்டும். பள்ளி உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்து, மாணவ மாணவிகள் அதிகம் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியின் கல்வி தரம் உயர்த்தும் வகையில் திட்டமிட வேண்டும்.
8. படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் பெண்கள் ஆண்கள் தொடர் வேலைவாய்ப்பு பெற தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். என்றும் மக்கள் பணியில் என்றும் உத்தமபாளையம் நகர்நல சங்கம். இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu