அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நாயுடு சங்கம் பாராட்டு

அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நாயுடு சங்கம்  பாராட்டு

பிளஸ் டூ தேர்வில் தேனி மாவட்ட   அளவில் முதலிடம் பெற்ற தேனி என்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் மிருத்யு ஜெயினுக்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் பரிசும், கேடயமும் வழங்கினார்.

தேனி மாவட்ட நாயுடு மகாஜனசங்கம்சார்பில், 10 மற்றும் 12 வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது

தேனி மாவட்டம், லட்சுமிபுரம் புதுப்பட்டியில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். லட்சுமிபுரம் நாயுடு சங்க தலைவர் ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பாலகுரு, செயலாளர் முருகேசன், பொருளாளர் பாண்டுரங்கன், தேனி மாவட்ட அனைத்து கிளைச்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், அதிக மதிப்பெண் பெற்ற 40 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதிக பெண்ணுடன் முதலிடம் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், கம்பம் பழமுதிர்ச்சோலை மனோகரன், ஆண்டிபட்டி ஆசிரியை வனஜா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இளைஞரணி தலைவர்கள் நவீன்குமார், ராஜ்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story