போடியில் வழக்கறிஞர் சாவில் மர்மம்: போலீசார் விசாரணை

போடியில் வழக்கறிஞர் சாவில் மர்மம்: போலீசார் விசாரணை
X
பைல் படம்.
போடியில் வழக்கறிஞர் சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் புகார் செய்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி தர்மத்துப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 50. வக்கீலான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. சிலமலை மங்கம்மாள் ரோட்டில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் மல்லாக்க படுத்த நிலையில் இறந்து கிடந்தார். இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரர் சுருளிராஜ் கொடுத்த புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா