மட்டனா? அல்லது சிக்கனா? சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது எது?
பைல் படம்.
சர்க்கரை நோய் இன்று மக்களிடையே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடு தேவை. எனவே அசைவத்தில் அவர்கள் எதை சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மட்டனில், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின், தயாமின், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் சிவப்பு இறைச்சியினை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது .ஏனெனில் அதில் இருக்கும் கொழுப்பு இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும்.
மட்டனில் உள்ள சோடியம் மற்றும் நைட்ரைட்டுகள் சுகர் பேஷண்டுகளுக்கு இன்சுலின் சுரப்பை பாதிக்கும் .எனவே அவர்களும் இதய நோயாளிகளும் மட்டனை தவிர்க்கணும். ஆராய்ச்சியின் படி, கோழிக்கறி சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று கூறப்படுகிறது. கோழி இறைச்சியில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு உள்ளது. புரதம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளதுடன், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உடன் பல வைட்டமின்களும் நிறைந்துள்ளன. அதனால் நீரிழிவு நோயாளிகளின் தைரியமாக சிக்கன் சாப்பிடலாம். அதற்குள் குறைந்த கொழுப்பு இருப்பதால் சமைத்து சாப்பிடலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu