கூட்டணிகளுக்கு நகராட்சி தலைவர் பதவி கிடையாது: திமுக - அதிமுக கறார்!

கூட்டணிகளுக்கு நகராட்சி தலைவர் பதவி கிடையாது: திமுக - அதிமுக கறார்!
X
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளை கையாள்வதிலும், பதவி பங்கீட்டிலும் தி.மு.க.- அ.தி.மு.க கட்சிகள் ஒரே மாதிரி செயல்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஆறு நகராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்ற தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் முடிவு செய்துள்ளன. எனவே நகராட்சி தலைவர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வாய்ப்புகள் இல்லை என இரு கட்சிகளும் திட்டவட்டமாக கூறி விட்டன.

அதேபோல் நகராட்சிகளில் சில வார்டுகளை மட்டுமானால் வழங்க தயாராக இருப்பதாக இரு கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்து விட்டன. அதேசமயம் பேரூராட்சி தலைவர் பதவிகளில் மிக குறைந்த அளவு வேண்டுமானால் தர தயாராக இருக்கிறோம். அதுவும் மிக சிறிய ஒற்றைப்படையில் தான் இருக்கும் என இரு கட்சிகளுமே கூறி விட்டன.

அ.தி.மு.க., வை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகளை பேசி சம்மதிக்க வைப்பதில் பெரிய பிரச்னை இருக்காது. காரணம் அ.தி.மு.க.,- பா.ஜ., இடையே ஒருமித்த நல்லுறவு உள்ளது. ஆனால் தி.மு.க., தான் கூட்டணி கட்சிகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக தி.மு.க.,விற்கு காங்கிரஸ் தான் பெரும் தலைவலியாக உள்ளது. அவர்கள் அதிக இடம் கேட்பதால் கேட்டதை தர முடியாமல் தி.மு.க., மிகுந்த ஆலோசனையில் உள்ளது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?