தெருவோர வியாபாரிகளுக்கு நகராட்சி நடைவண்டி

தெருவோர வியாபாரிகளுக்கு நகராட்சி நடைவண்டி
X

தேனி நகராட்சி அலுவலகம் (பைல் படம்).

Street Vendors- தேனியில் தெருவோர வியாபாரிகள் 300 பேருக்கு, வியாபாரம் செய்ய வசதியாக இலவச நடை வண்டி வழங்கப்படுகிறது.

Street Vendors- இது குறித்து நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் கூறியதாவது: தேனி நகராட்சியில் உள்ள தெருவோர வியாபாரிகள், அவர்களின் வாழ்க்கை தரம், வியாபார முறைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை நுாறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் நடைவண்டி வழங்கப்படுகிறது. ஒரு வண்டியின் மதிப்பு ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய். தற்போது நுாறு வண்டிகள் வந்துள்ளன. இன்னும் 200 பேர் கொண்ட பட்டியல் தயாராகி வருகிறது. அவர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?