தேனி காமராஜர் பூங்காவை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தேனி நகராட்சி பூங்கா பைல் படம்.
Theni news Today - தேனி நகரின் மையப்பகுதியில் என்.ஆர்.டி., நகர், சமதர்மபுரம் சந்திக்கும் இடத்தில் 50 சென்ட் இடத்தில் காமராஜர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், சமூக விரோதிகள் புகுந்தனர். கஞ்சா, மதுப்பிரியர்கள், உல்லாச பிரியர்களின் கூடாரமாக பூங்கா மாறியது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து காமராஜர் பூங்காவில் கபடி மைதானம், நடைபாதை, புல்பாதைகளை அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், சுற்றுச்சுவர் எடுத்து, எல்.இ.டி., பல்புகளை பொருத்தவும், பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகையில் அமரும் சிலாப்புகளை அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நமக்கு நாமே திட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu