இரண்டு புலிகள் காப்பகங்களையும் இணைக்க விவசாயிகள் வலியுறுத்தல்..!
குண்டாறு அணையில் தெரியும் மலையின் நிழல்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் இரண்டையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்கோட்டைக்கு அருகே அழகிய வனப்பகுதியில் உள்ள குண்டாறு அணை. இந்த அணையில் மலையின் எதிரொலி மிகவும் துல்லியமாக தெரியும். அந்த அளவு பளீர் என்ற நீர் நிரம்பி உள்ளது. அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. அணையில் இருந்து எதிர்திசையில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
இரண்டு புலிகள் காப்பகத்திற்கு இடையே 32 கி.மீ., வனப்பகுதி மட்டுமே உள்ளது. இந்த வனப்பகுதியினையும் புலிகள் காப்பகமாக மாற்ற வேண்டும். இதன் மூலம் இரண்டு புலிகள் காப்பகமும் இணையும். இதன் மூலம் வனப்பகுதியின் பாதுகாப்பு பலப்படும். வனவளம் மிகவும் அதிகரிக்கும். இந்த இரு புலிகள் காப்பகங்கள் உள்ள வனங்களும் செழித்தால் ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு கிடைக்கும் அளவு மிகுந்த சிறப்பு வாய்ந்த வனத்தை நாம் உருவாக்க முடியும்.
எனவே இடைப்பட்ட இந்த 32 கி.மீ., வனப்பகுதியை ரிசர்வ் பாரஸ்ட் என்ற அந்தஸ்த்தில் இருந்து டைகர் ரிசர்வ் பாரஸ்ட் ஆக மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu