முல்லைப்பெரியாறு தண்ணீரை வைகை அணையில் சேமிக்கும் தமிழக அதிகாரிகள்

முல்லைப்பெரியாறு தண்ணீரை  வைகை அணையில் சேமிக்கும் தமிழக  அதிகாரிகள்
X

நீர் நிரம்பி காணப்படும் வைகை அணை.

Mullaperiyar Dam Latest News- முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் அமல்படுத்தப்பட்டுள்ளதால்அங்குள்ள நீரை வைகையில் அதிகாரிகள் சேமித்து வருகின்றனர்.

Mullaperiyar Dam Latest News- முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 3 மாதத்திற்கு 142 அடி நீர் தேக்க வாய்ப்பு இல்லை. இதனை எதிர்த்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் கடந்த வாரம் 136 அடியை எட்டியது. கேரளாவில் உள்ள வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, நீர் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மழை தானாகவே குறைந்தது.இதனால் அணைக்கு நீர் வரத்தும் குறைந்தது.

இருப்பினும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 2000ம் கனஅடி வரை நீர் எடுத்து தமிழகத்தில் உள்ள வைகை அணையில் சேமிக்க தொடங்கி உள்ளனர். இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 134.35 அடியாக குறைந்துள்ளது. வைகை அணை நீர் மட்டம் 61.68 அடியாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான அளவு நீரை மட்டும் பெரியாறு அணையில் இருப்பு வைத்து விட்டு, மீதம் உள்ள தண்ணீரை வைகையில் சேமிக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்